பார்வை எனும் கொடையை மீட்டுத்தருதல்
ACT4Vision
பார்வை இழப்பு, குறிப்பாக முறையான சுகாதார வசதி இல்லாதவர்களுக்கு, வாழ்க்கையையே மாற்றிவிடும். பார்வையை மீட்டுத்தருவது மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்லவும், குடும்பத்தைப் பராமரிக்கவும், சமூக வாழ்வில் முழுமையாகப் பங்கேற்கவும் உதவுகிறது.
திட்டம் செயற்படும் முறை
கிளிநொச்சி, நாவலப்பிட்டி, டிக்கோயா அரச வைத்தியசாலைகளுக்கு வில்லைகளையும் சத்திரசிகிச்சைப் பொருட்களையும் வழங்குகிறோம். அவற்றின் கண் சிகிச்சைக் குழுக்கள் ஒவ்வொரு மாதமும் வசதியற்ற நோயாளர்களுக்குச் சத்திரசிகிச்சை செய்கின்றன. 2025இல் கிளிநொச்சி நோயாளர்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், போக்குவரத்து உட்பட, சத்திரசிகிச்சைகளுக்கும் ஆதரவளித்தோம்.
இந்த முறை தற்போதுள்ள வைத்தியசாலை வசதிகளையும் திறமையான சுகாதார நிபுணர்களையும் பயன்படுத்துகிறது. சத்திரசிகிச்சைக்குத் தேவையானவற்றை ACT வழங்குகிறது. நாடு முழுவதும் மேலும் பல வைத்தியசாலைகளுக்கு இதை விரிவுபடுத்த எதிர்பார்க்கிறோம்.
சுருக்கமாக
பெப்ரவரி 2026 நிலவரப்படியான எண்ணிக்கைகள்.
பார்வை எனும் கொடையை மீட்டுத்தாருங்கள்
எமது நன்கொடையாளர் குடும்பத்தில் இணைந்து, சிகிச்சைக்கு வசதியற்ற ஒருவர் மீண்டும் பார்வை பெற உதவுங்கள்.
